இந்தச் செயலியைப் பற்றிய அறிமுகம்
WhatsApp பற்றியும், பிசினஸிற்காக உள்ளமைக்கப்பட்டுள்ள கருவிகள் பற்றியும் நீங்கள் விரும்பும் அனைத்தும்
WhatsApp Business என்பது இலவசமாக தரவிறக்கக்கூடிய செயலியாகும், இது நீங்கள் புத்திசாலித்தனமாக பணிசெய்யவும், நம்பிக்கையை வளர்க்கவும், உங்கள் பிசினஸை வளர்ச்சி அடையச் செய்யவும் உதவும் உள்ளமைக்கப்பட்ட கருவிகளைக் கொண்டுள்ளது.
நீங்கள் இலவச அழைப்புகளையும், இலவச சர்வதேச மெசேஜிங் சேவையையும் பெறுவீர்கள், அத்துடன் உரையாடல்கள் மூலம் இன்னும் பலவற்றைச் செய்ய உதவும் பிசினஸ் அம்சங்களும் உள்ளன.
பின்வருபவை போன்ற பிசினஸ் நன்மைகளைப் பெற செயலியைத் தரவிறக்குங்கள்:
புத்திசாலித்தனமாக பணி செய்யலாம். செயலியை, உங்களுக்காக பணி செய்ய அனுமதித்து நேரத்தை மிச்சப்படுத்துங்கள்! வாடிக்கையாளர்களுக்குத் தானியக்க முறையில் விரைவான பதில்களையும், பணியில் இல்லை மெசேஜ்களையும் அனுப்புவதன் மூலம் நீங்கள் எந்தவொரு பிசினஸ் வாய்ப்பையும் இழக்க மாட்டீர்கள். உரையாடல்களை விரைவாக ஒழுங்கமைக்கவும், ஃபில்ட்டர் செய்யவும், முக்கியமானவற்றைக் கண்டறியவும் முகப்புப்பெயர்களைப் பயன்படுத்துங்கள். சலுகை அல்லது செய்திகளைப் பகிர ஸ்டேட்டஸை உருவாக்குங்கள், மேலும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை உருவாக்க, செயலிக்குள்ளேயே ஆர்டர்கள் எடுக்கும் வசதி மற்றும் பேமெண்ட்டுகளைச் செய்யும் வசதியை அமைத்திடுங்கள்.
வாடிக்கையாளர்களிடம் நல்ல முறையிலான தொடர்புகளையும் நம்பிக்கையையும் உருவாக்கலாம். பாதுகாப்பான தளத்தில் தொழில்முறை பிசினஸ் விவரத்தின் மூலம், வாடிக்கையாளர்களிடம் நம்பகத்தன்மையையும் நம்பிக்கையையும் உருவாக்குங்கள். சிறப்பாக பதிலளிக்கக்கூடிய வாடிக்கையாளர் ஆதரவை வழங்கவும் நீண்ட கால நம்பிக்கையை உருவாக்கவும் செயலியைப் பயன்படுத்துங்கள். உங்கள் நம்பகத்தன்மையை வலுப்படுத்த Meta Verified**க்குச் சந்தா பெறுங்கள்.
அதிகம் விற்பனை செய்து, பிசினஸில் வளர்ந்திடலாம். வாடிக்கையாளர்கள் உங்கள் பிசினஸைக் கண்டறியச் செய்யுங்கள், உங்கள் பிசினஸை விளம்பரப்படுத்துங்கள், அத்துடன் மதிப்புமிக்க வாடிக்கையாளர் இணைப்புகளை உருவாக்குங்கள். வாடிக்கையாளர்களுக்கு இலக்குக் கொண்ட சலுகைகளை அனுப்பி விற்பனையை அதிகரியுங்கள்; கிளிக் செய்தால் WhatsAppக்கு அழைத்துச் செல்லும் விளம்பரங்களை உருவாக்குங்கள்; உங்கள் தயாரிப்பு கேட்டலாகை காட்சிப்படுத்துங்கள்; மேலும் வாடிக்கையாளர்களுக்கு செயலிக்குள்ளேயே ஆர்டர்கள் எடுக்கும் மற்றும் பேமெண்ட் செலுத்தும் வசதியை வழங்குங்கள்.**
பொதுவான கேள்விகள்
அனைத்து அம்சங்களும் இலவசமானவையா?
செயலியை இலவசமாக தரவிறக்கம் செய்து, பயன்படுத்தலாம், இதில் இலவச மற்றும் கட்டண அம்சங்கள் என இரண்டு விதமான அம்சங்களும் உள்ளன.
என்னுடைய தனிப்பட்ட WhatsAppஐயும் நான் பயன்படுத்தலாமா?
ஆம்! உங்களிடம் இரண்டு வெவ்வேறு மொபைல் எண்கள் இருக்கும் வரை, உங்கள் பிசினஸ் மற்றும் தனிப்பட்ட கணக்குகள் இரண்டையும் ஒரே சாதனத்தில் வைத்துக் கொள்ளலாம்.
எனது அரட்டை வரலாற்றை பரிமாற்றம் செய்ய முடியுமா?
ஆம். WhatsApp Business செயலியை அமைக்கும்போது, உங்கள் மெசேஜ்கள், மீடியா மற்றும் தொடர்புகளை உங்கள் WhatsApp கணக்கிலிருந்து உங்கள் பிசினஸ் கணக்கிற்கு பரிமாற்றம் செய்ய, காப்பெடு செய்ததை மீட்டெடுக்கலாம்.
எத்தனை சாதனங்களை நான் இணைக்கலாம்?
உங்கள் கணக்கில் மொத்தம் ஐந்து இணைய அடிப்படையிலான சாதனங்கள் அல்லது மொபைல் போன்களை வைத்திருக்கலாம் (நீங்கள் Meta Verified***க்கு சந்தா பெற்றிருந்தால் 10 சாதனங்கள் வரை வைத்திருக்கலாம்).
*டேட்டா கட்டணங்கள் விதிக்கப்படலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் சேவை வழங்குநரைத் தொடர்புகொள்ளுங்கள்.
**எல்லா சந்தைகளிலும் கிடைப்பதில்லை
**உலகெங்கிலும் விரைவில் கிடைக்கப்பெறும்
புதுப்பிக்கப்பட்டது:
8 மே, 2025